காஷ்மீர் மற்றொரு ஆஃப்கானிஸ்தானாக மாறாமல் காப்பது இந்திய ராணுவம் தான்; பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் பேச்சு !!

  • Tamil Defense
  • September 25, 2021
  • Comments Off on காஷ்மீர் மற்றொரு ஆஃப்கானிஸ்தானாக மாறாமல் காப்பது இந்திய ராணுவம் தான்; பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் பேச்சு !!

பிரிட்டன் பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினரான டெப்பி ஆப்ரஹாம்ஸ் மற்றும் பாகிஸ்தானை பூர்வமாக கொண்ட உறுப்பினர் யாஸ்மின் குரேஷி ஆகியோர் காஷ்மீரில் மனித உரிமைகள் பற்றி பேச தீர்மானம் ஒற்றை முன்மொழிந்தனர்.

அப்போது அதில் பங்கேற்று பேசிய பாராளுமன்ற உறுப்பினர் பாப் ப்ளாக்மேன் ஆஃப்கனில் படை விலக்கத்துக்கு பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம், இந்திய ராணுவம் தான் காஷ்மீர் மற்றொரு ஆஃப்கானிஸ்தானாக மாறாமல் தடுத்து காபாற்றி வருவதாக தெரிவித்தார்.

இந்தியா தனது படைகளை விலக்கி கொண்டால் அடிப்படைவாத சக்திகள் காஷ்மீரை கைபற்றி பின்னர் ஜனநாயகத்தை வேராடு சாய்த்து விடும் வாய்ப்புகள் மிக அதிகம், சிறுபான்மை மக்களுக்கு பேராபத்து ஏற்படும் எனவும்,

இந்திய ராணுவம் மற்றும் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு மட்டும் தான் தொடர்ந்து காஷ்மீரை காபாற்றி வருகிறது, காஷ்மீர் முழுவதும் இந்தியாவுக்கு சொந்தமான பகுதி எனவும் அவர் கூறினார்.

மேற்குறிப்பிட்ட டெப்பி ஆப்ரஹாம்ஸ் பங்கு வகிக்கும் அமைப்பு ஒன்று பாகிஸ்தான் அரசிடம் இருந்து பணம் பெறுவதாக குற்றச்சாட்டு உள்ளதும், கடந்த ஆண்டு சரியான ஆவணங்கள் இன்றி இந்தியா வந்ததற்காக இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பி வைகப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.