லடாக்கில் இந்தியா மாபெரும் யுத்த பயிற்சி

இந்திய இராணுவம் லடாக் பகுதியில் மாபெரும் யுத்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது.இந்திய இராணுவத்தின் XIV கோர் அல்லது Fire and Fury Corps இந்த ஒருங்கிணைந்த போர்பயற்சியை லடாக்கில் மேற்கொண்டுள்ளது.

இந்த பயிற்சியை பயர் அன்ட் பியூரி கோர் படைப் பிரிவின் கமாண்டர் பிஜிகே மேனன் நேரில் பார்வையிட்டார்.

நேரடி தாக்குதல் மற்றும் உண்மையான குண்டுகளை வீசி இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது.எல்லையில் இந்திய சீனா பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்த பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை பிஜிகே மேனன் அவர்கள் தான் என்பதும் குறிபபிடத்தக்கது.