ஜென் டெக்னாலஜி நிறுவனத்திடம் இருந்து ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு வாங்க முடிவு

  • Tamil Defense
  • September 2, 2021
  • Comments Off on ஜென் டெக்னாலஜி நிறுவனத்திடம் இருந்து ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு வாங்க முடிவு

Zen Technologies நிறுவனத்திடம் இருந்து சுமார் 120 கோடிகள் செலவில் பாதுகாப்பு படைகளுக்கு ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

ஆர்டர் ஒரு வருடத்திற்குள்ளாக முடிக்கப்படும் எனவும் ஒப்பந்தத்தின் இரகசியம் கருதி ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என Zen Tech நிறுவனம் கூறியுள்ளது.

இது தவிர பாதுகாப்பு படைகள் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை ஆர்டர் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படை டிஆர்டிஓ தயாரிப்பு கடற்சார் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை ஆர்டர் செய்துள்ளது.ட்ரோன்களால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க இந்த அமைப்பு தற்போது ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரில் விமான தளத்தில் ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய பிறகு முப்படைகளும் தற்போது இதனால் ஏற்படும் பிரச்சனையை உணர்ந்து ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை வாங்குவதில் கவனம் செலுத்தியுள்ளன.

கடற்படையும் முக்கிய தளங்களுக்கு மேல் ட்ரோன்கள் பறத்தலை தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.