
இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேம்படுத்திய MRSAM/Barak-8 ஏவுகணை அமைப்பு விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் இணைந்து மேம்படுத்திய இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள சோதனை மையத்தில் பலமுறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்த அமைப்பை இந்தியாவின் DRDO மற்றும் இஸ்ரேலின் Israel Aerospace Industries இணைந்து மேம்படுத்தியது ஆகும்.50-70கிமீ வரை வானில் வரும் எதிரியின் ஏவுகணை மற்றும் வான் இலக்குகளை தாக்கியழிக்க கூடியது ஆகும்.
வானில் வரும் எதிரியின் வான் இலக்குகளை வானிலேயே தாக்கியழிக்க கூடிய திறன் பெற்றது இந்த ஏவுகணை அமைப்பு.