ஸ்டீல்த் எதிர்ப்பு ரேடாரை வாங்கும் இந்திய விமானப்படை

  • Tamil Defense
  • September 5, 2021
  • Comments Off on ஸ்டீல்த் எதிர்ப்பு ரேடாரை வாங்கும் இந்திய விமானப்படை

இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனமான ஆல்பா டிசைன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படை ஆறு Counter-stealth Radars வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த ஆல்பா டிசைன் நிறுவனம் விமானப்படைக்கு ஆறு Very High-Frequency radars தயாரித்து வழங்கும் ஆர்டரை பெற்றுள்ளது.சுமார் Rs 200+ கோடியில் இந்த ரேடார்களை தயாரித்து இந்நிறுவனம் வழங்கும்.

விமானப்படை தற்போது செயல்பாட்டில் உள்ள சோவியத் கால உரால் ட்ரக்கை அடிப்படையாக கொண்ட P-18 early warning ரேடாருக்கு மாற்றாக இந்த புதிய ரேடார்களை வாங்குகிறது.

விமானப்படையிடம் தற்போது மீடியம் பவர் Arundhar, Ashwini, மற்றும் Rohini 3D Radar ஆகிய ரேடார்கள் நெடுந்தூர கண்காணிப்புக்கென்று உள்ளன.

இந்த VHF ரேடார் 250+கிமீ தூரம் வரை கண்காணிக்கும் திறன் பெற்றது ஆகும்.