எஸ்500 வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் ஏற்றமதி இந்தியாவுக்கு நடைபெறலாம் ரஷ்ய துணை பிரதமர் !!
ரஷ்ய துணை பிரதமர் போரிஸோவ் சமீபத்தில் ஊடகம் ஒன்றுடன் பேசும்போது இந்தியாவுக்கு எஸ்500 முதலாவதாக ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் இந்தியா தான் ரஷ்யாவின் முதன்மையான ஆயுத ஏற்றுமதி நாடு எனவும், சில நேரங்களில் வேறு யாருக்கும் விற்காத தளவாடங்கள் இந்தியாவுக்கு விற்கப்பட்டு உள்ளன எனவும் கூறினார்.
ரஷ்ய பாதுகாப்பு படைகள் தற்போது எஸ்500 வான் பாதுகாப்பு அமைப்பை படையில் இணைக்க துவங்கி உள்ளதாகவும் ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிஸோவ் தெரிவித்தார்.
எஸ்400 அமைப்பானது விமானங்களை சுட்டு வீழ்த்த பயன்படும் நிலையில் எஸ்500 அமைப்பானது பலிஸ்டிக் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தக்கூடிய ஆற்றல் பெற்றது என கூறப்படுகிறது.
சில வல்லுநர்கள் எஸ்500 வான் பாதுகாப்பு அமைப்பால் குறைந்த உயரத்தில் பறக்கும் செயற்கைகோள்களை கூட சுட்டு வீழ்த்த முடியும் என கூறுகின்றனர்.