இந்தியாவின் முதல் ஏவுகணை சோதனை கப்பல் விரைவில் சோதனை !!

  • Tamil Defense
  • September 7, 2021
  • Comments Off on இந்தியாவின் முதல் ஏவுகணை சோதனை கப்பல் விரைவில் சோதனை !!

இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே கட்டியமைத்த ஏவுகணை சோதனை கப்பலான ஐ.என்.எஸ். அன்வேஷ் விரைவில் சோதனை ஓட்டம் செல்ல உள்ளது.

இந்த ஏவுகணை சோதனை கப்பல் மூலமாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஏவுகணை சோதனைகளை விரைவாக நடத்தி முடிக்கலாம்.

குறிப்பாக இடைமறிப்பு ஏவுகணைகளை சோதிக்க முடியும், இந்த கப்பல் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் படையில் இணைக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

உலகில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே இத்தகைய அதிநவீன கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன, அந்த வரிசையில் இந்தியாவும் விரைவில் இடம்பெற உள்ளது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.