
பூட்டானுக்கு சிறிய ரக செயற்கை கோள் ஒன்றை தயாரிக்க இஸ்ரோ வெள்ளிக்கிழமை அன்று ஒப்பந்தம் செய்து உளளது.
இஸ்ரோவின் அறிவியல் செயலாளர் உமா மகேஸ்வரன் மற்றும் பூட்டான் சார்பில் அந்நாட்டு தகவல் தொடர்பு துறை இயக்குனர் ஜிக்மே டென்சிங் ஆகியோர் ஆன்லைன் நிகழ்ச்சியில் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பூட்டானுக்கான இந்திய தூதர் ரூச்சிரா கம்போஜ் மற்றும் இந்தியாவுக்கான பூட்டான் தூதர் மேஜர் ஜெனரல் வெட்ஸாப் நம்க்யால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதுபற்றி ருச்சிரா கம்போஜ் கூறுகையில் இந்தியா பூட்டான் உறவுகளில் விண்வெளி ஆராய்ச்சி புதிய அத்தியாயம் என்றார்.