தரைப்படைக்கு 118 சுதேசி அர்ஜூன் மார்க்-1ஏ டாங்கிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது !!

  • Tamil Defense
  • September 24, 2021
  • Comments Off on தரைப்படைக்கு 118 சுதேசி அர்ஜூன் மார்க்-1ஏ டாங்கிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது !!

நேற்று இந்திய தரைப்படை சுமார் முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மார்க்-1ஏ டாங்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி சுமார் 118 அர்ஜ் மார்க்-1ஏ டாங்கிகள் சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையால் தயாரிக்கப்படும் என்பதும் இவற்றின் மதிப்பு சுமார் 7523 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த டாங்கிகள் ஏற்கனவே தரைப்படையில் சேவையில் இருக்கும் 124 அர்ஜூன் மார்க்-1 டாங்கிகளை விடவும் அதிநவீனமானவை என கூறப்படுகிறது.

அதாவது சுமார் 72 வகையான மேம்பாடுகள் செய்யப்பட்டது மட்டுமின்றி உள்நாட்டு தொழில்நுட்பமும் மிக அதிகமாக இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த டாங்கிகள் சுமார் 7000 கிலோமீட்டர் தொலைவுக்கு இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், இது சுதேசி தொழில்நுட்பத்தில் மற்றொரு மைல்கல் எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஃபெப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் பிரதமர் மோடி மற்றும் தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் இந்த டாங்கி தரைப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.