
ஃபிரெஞ்சு நாட்டின் நேவல் க்ருப் தயாரித்த பராக்குடா அல்லது சஃப்ரன் ரக அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் தற்போது அந்நாட்டு கடற்படையில் உள்ள ரூபிஸ் ரக அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கு மாற்றாகும்.
சுமார் 7.9 பில்லியன் யூரோக்கள் மதிப்பில் 6 சஃப்ரன் ரக அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கான ஆர்டரை ஃபிரெஞ்சு அரசு நேவல் க்ருப்புடன் உறுதி செய்துள்ளது.
இந்த வகை கப்பல்களில் பயன்படுத்தப்படும் அணு உலையில் 7-10 வருடங்களுக்கு ஒரு முறை எரிபொருள் நிரப்ப வேண்டும் இது முந்தைய ரூபிஸ் ரக கப்பல்களை விடவும் சற்றே நவீனமானது ஆகும். அமெரிக்க கப்பல்களில் 30 வருடங்கள் வரை எரிபொருள் நிரப்ப வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சஃப்ரன் ரக நீர்மூழ்கி கப்பல்களில் தற்போது சேவையில் இருக்கும் ட்ரையம்ஃபான்ட் ரக அணுசக்தி பலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்களில் உள்ள தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது இதில் பம்ப்ஜெட் பரோப்பல்ஷனும் அடங்கும்.
இந்த சஃப்ரன் ரக நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கவல்ல நேவல் க்ரூஸ் ஏவுகணைகளை ஏவ முடியும் இந்த பணியில் ஸ்கால்ப் க்ரூஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நீர்மூழ்கி கப்பல்கள் கப்பல் எதிர்ப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு உளவு கண்காணிப்பு தரை தாக்குதல் சிறப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ளும், மேலும் கடற்படை 12 சிறப்பு படை கமாண்டோ வீரர்களையும் அவர்களது கருவிகளையும் சுமக்க வல்லது.
இந்த நீர்மூழ்கி கப்பல்களில் சிறப்பு படை வீரர்களை களமிறக்கவும் மீண்டும் கப்பலுக்கு உள்ளே கொண்டு வரவும் ஒரு சிறு நீர்மூழ்கி இருக்கும் இதுவரை அமெரிக்க மற்றும் பிரட்டன் கடற்படைகளிடம் மட்டுமே இந்த வசதி உள்ளது என்பது கூடுதல் தகவல்.
சமீபத்தைம ஆக்கஸ் ஒப்பந்தமும் ஃபிரெஞ்சு கொந்தளிப்பும் இந்தியாவின் நீண்ட நாள் அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பத்திற்கான வேட்கையும் தற்போது இருதரப்பிலும் எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது என்பது மிகையல்ல.