புதன்கிழமை அன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்திய கூட்டுபடை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இந்தியா புதிய ராக்கெட் படை ஒன்றை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக கூறினார்.
இந்த ராக்கெட் படையில் பல்வேறு வகையான அதிநவீன ஏவுகணைகள் இடம்பெறும் எனவும், படைகள் இடையேயான ஒத்துழைப்பு அதிகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
இதை தவிர வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு தலா ஒரு தியேட்டர் கமாண்ட் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேலும் பேசுகையில் பாகிஸ்தானை போன்ற பலவீனமான நாடு தொடர்ந்து நிழல் யுத்தத்தை நடத்தும் சீனா தொடர்ந்து எல்லையில சீண்டலாம் எனக்கூறிய அவர் நமது எதிரிகள் எந்த வகையில் பிரச்சினை ஏற்படுத்தினாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார்.