ஃபிரான்ஸிடம் இருந்து 24 பழைய மிராஜ் விமானங்களை வாங்க முடிவு !!

  • Tamil Defense
  • September 17, 2021
  • Comments Off on ஃபிரான்ஸிடம் இருந்து 24 பழைய மிராஜ் விமானங்களை வாங்க முடிவு !!

இந்திய விமானப்படை தனது போர் விமான படை அணிகளை வலுப்படுத்தும் வகையில் சுமார் 24 பழைய மிராஜ்-2000 விமானங்களை வாங்க திட்டமிட்டு உள்ளது.

அதன்படி 8 மிராஜ் விமானங்கள் பறக்கும் நிலையிலும் மீதமுள்ளவை 5 விமானங்கள் காலாவதியான நிலையிலும் 11 விமானங்கள் அரை குறை நிலையிலும் உள்ளன.

இவற்றில் அந்த 8 விமானங்கள் மேம்படுத்தப்பட்டு நேரடியாக படையில் இணைக்கப்படும் மற்றவை பிற மிராஜ் விமானஙாகளுக்கான உதிரி பாகங்களுக்காக பயன்படுத்தி கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப்படை இதற்காக சுமார் 27 மில்லியன் யூரோ மதிப்பிலான ஒப்பந்தத்தை செயல்படுத்தி உள்ளது, ஒரு விமானத்திற்கு தலா 1.125 மில்லியன் யூரோக்கள் ஆகும் என கூறப்படுகிறது.

50 மிராஜ்-2000 போர் விமானங்கள் 1985ஆம் ஆண்டு வாங்கப்பட்டன, அன்று முதல் இந்தியாவின் பாதுகாப்பில் தவிர்க்க முடியாத இடம்பெற்ற இவை கடந்த 2019 பாலகோட் தாக்குதல்களை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.