
இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மூன்று நாட்கள் சுற்றுபயணமாக ஒமான் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு மூத்த ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசி பல முக்கிய விவகாரங்கள் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளார்.
இதன் ஒரு பகுதியாக இரண்டு நாடுகளுக்கு இடையே கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இதில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் ஒமானிய கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சயீஃப் பின் நாசர் மொஹ்சென் அல் ராபி ஆகியோர் கையெழுத்து இட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி இரண்டு நாடுகளும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பரிமாறி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.