
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தாலிபான் தலைவர்களுக்கு ஆதரவாக சீனா தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்தது.
அதன்படி சுமார் 180 நாட்களுக்கு தாலிபான்களின் தலைவர்கள் வெளிநாட்டு பயணம் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்பது சீன விருப்பமாகும்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைவராக தற்போது இந்தியா உள்ள நிலையில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு அந்த தீர்மானத்தை முடக்கியுள்ளது.
மேலும் ஆஃப்கானிஸ்தான் மண்ணை தாலிபான்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவோ அல்லது பயிற்சி அளிக்கவோ பயன்படுத்தக்கூடாது என்ற ஒருமித்த கருத்து பல்வேறு நாடுகளிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது தாலிபான்கள் அமைத்துள்ள இடைக்கால அரசின் பிரதமர் உட்பட 14 அமைச்சர்கள் பெரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.