கிழக்கு லடாக்கில் எல்லையோரம் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகள் தொடர்ந்து சீன ராணுவ ட்ரோன்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றன.
கோக்ரா, ஹாட் ஸ்ப்ரீங்ஸ் மற்றும் தவ்லத் பெக் ஒல்டி ஆகிய பகுதிகளில் இத்தகயை நடவடிக்கைகள் கடந்த 2012ஆம் ஆண்டு முதலாக அதிகரித்து உள்ளதாகவும்,
லடாக்கின் தெளிவான வான் பகுதியும் உயர்ந்த மலை சிகரங்களும் இந்த கண்காணிப்பு பணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த வருடம் முதலே நடைபெற்று வரும் எல்லை பிரச்சினையில் பல்வேறு பகுதிகளில் இருந்து இருதரப்பு படைகள் விலகினாலும் இன்னும் பல பகுதிகளில் தொடர்ந்து வீரர்கள் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.