
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு VLSRSAM ரக ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இது கடற்படைக்கானதாகும்.
இதனை தொடர்ந்து தற்போது இந்திய விமானப்படையின் தேவைக்கேற்ப VL-SRSAM (QR) ரக ஏவுகணைகளை
தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.
4 செல்களை கொண்டிருக்கும் இந்த ஏவும் அமைப்பானது ஒரு 4×6 லாரியில் பொருத்தப்பட்ட நிலையில் இருக்கும், இது சுமார் 360० கோணத்தில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த மாதங்களில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கான ரகங்களை சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.