ஆப்கன் பிரச்சனை எதிரொலி; ஆயுத கடத்தலை தடுக்க நடவடிக்கை

  • Tamil Defense
  • September 2, 2021
  • Comments Off on ஆப்கன் பிரச்சனை எதிரொலி; ஆயுத கடத்தலை தடுக்க நடவடிக்கை

ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் தற்போது நடக்கும் பிரச்சனையை அடுத்து இந்தியா அட்டாரி எல்லையில் முதல் Radiation Detection Equipment (RDE) ஐ நிறுவியுள்ளது.இந்த ரேடியேசனை கண்டறியும் கருவி மூலம் ஆயுத கடத்தலை கண்டறிந்து தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருவி full-body truck scanner என அழைக்கப்படும்.அடிப்படையில் இது ஒரு எக்ஸ் ரே அமைப்பு போல தான்.

ட்ரக் போன்றவற்றில் ஆயுதம்,வெடிபொருள் மற்றும் மற்ற சட்டவிரோத பொருள்கள் இருந்தால் இந்த அமைப்பு ஸ்கேன் செய்து தெரிவிக்கும்.தவிர ரேடியாக்டிவ் போன்ற மெட்டீரியல்கள் கடத்தப்பட்டால் கூட அதையும் கண்டறிய கூடியது.