ஏன் ஃபிரான்ஸ் இந்தியாவின் விருப்பமிக்க பங்காளியாக திகழ்கிறது ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • September 30, 2021
  • Comments Off on ஏன் ஃபிரான்ஸ் இந்தியாவின் விருப்பமிக்க பங்காளியாக திகழ்கிறது ஒரு பார்வை !!

சமீபத்தைய ஆக்கஸ் முத்தரப்பு ஒப்பந்தம் ஃபிரான்ஸுக்கு மிகப்பெரிய உள்ளைச்சலை ஏற்படுத்தி உள்ளது இதன் காரணமாக இந்தியாவுடன் கடற்படை அணு உலை திட்டத்தில் கைகோர்க்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.

ஆஸ்திரேலியா ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து 12 டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளை வாங்க விரும்பிய நிலையில் அவற்றின் விலை 40 பில்லியன் டாலரில் இருந்து 65 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது இது அமெரிக்க மற்றும் பிரட்டிஷ் அணுசக்தி நீர்மூழ்கிகளின் மதிப்பை விட அதிகமாகும்.

மேலும் அந்த 12 நீர்மூழ்கிகளும் படையில் இணையும் போது காலம் கடந்த நிலை ஏற்படும் என கருதியதால் ஃபிரான்ஸ் உடன் ஒப்பந்தத்தை உறுதி செய்யாமல் ஜகா வாங்கியது.

தற்போது இந்த வேதனையில் இருக்கும் ஃபிரான்ஸ் இந்தியாவின் கடற்படை அணு உலை திட்டத்திற்கும் அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி திட்டத்திற்கும் உதவும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும் ஃபிரான்ஸ் காலம் காலமாக இந்தியாவுடன் நட்பு பாராட்டி வந்துள்ளது குறிப்பாக அணு ஆயுத சோதனைக்கு பிறகு அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை துளியும் மதிக்காமல் இந்தியாவுக்கு உதவியது.

ஆகவே தற்போதும் இரண்டு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வதன் மூலமாக பலனடையவும் நட்புறவை பலப்படுத்த கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.