இங்கிலாந்து கடற்படைக்கு கப்பல் வடிவமைக்கும் இந்தியா !!

  • Tamil Defense
  • September 5, 2021
  • Comments Off on இங்கிலாந்து கடற்படைக்கு கப்பல் வடிவமைக்கும் இந்தியா !!

இங்கிலாந்து கடற்படைக்கு படையணி உதவி கலன் ரக கப்பல்களை வடிவமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனமான L & T பெற்றுள்ளது.

இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் லார்சன் அன்ட் டூப்ரோ உள்ளிட்ட நான்கு நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை கூட்டாக செயல்படுத்தும் என தெரிவித்துள்ளது.

நான்கு நிறுவனங்களுக்கும் தலா 5 மில்லியன் பவுன்டுகள் மதிப்பிலான போட்டி அடிப்படையிலான ஒப்பந்தம் கிடைக்கும் என்பதையும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

லார்சன் அன்ட் டூப்ரோ மற்றும் லெய்டோஸ் ஆகியவை ஒரா அணியாகவும், செர்கோ மற்றும் டேமன் ஆகியவை ஒரு அணியாகவும், BMT மற்றும் ஹார்லாக் அன்ட் வோல்ஃப் ஆகியவை ஒரு அணியாகவும், பேப்காக் மற்றும் BAE சிஸ்டம்ஸ் ஆகியவை ஒரு அணியாகவும் பங்கேற்க உள்ளன.

இந்த ஒட்டுமொத்த திட்டத்தின் மதிப்பு சுமார் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதும் வெற்றி பெறும் அணி 2023 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகை கப்பல்கள் ஒரு மிகப்பெரிய கடற்படை அணி நீண்ட தூர அல்லது நீண்ட கால நடவடிக்கைகளில் ஈடுபடும் போது உடன் உணவு ஆயுதங்கள் மருந்து பொருட்கள் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தளவாடங்களை சுமந்து செல்லும்

இதனால் கடற்படை படையணிகள் எவ்வித உதவியோ தயவோ இன்றி சுயமாக செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.