பயங்கர ஆயுதங்களை விட்டுச்சென்ற அமெரிக்கா; இந்தியா கவலை

  • Tamil Defense
  • September 2, 2021
  • Comments Off on பயங்கர ஆயுதங்களை விட்டுச்சென்ற அமெரிக்கா; இந்தியா கவலை

ஆகஸ்டு 31 அன்று மொத்த அமெரிக்க நேச நாட்டு படைகளும் ஆப்கனை விட்டு சென்றுவிட்டன.அத்துடன் அவர்கள் 80 பில்லியன் டாலர்கள் பெருமானம் உள்ள ஆயுதங்களையும் விட்டுச்சென்றுள்ளனர்.

அமெரிக்கா ஆப்கன் படைகளுக்கு 2003 முதல் 16,000 இரவில் பார்க்கும் கருவிகள், M16 துப்பாக்கிகள் உட்பட 600,000 இன்பான்ட்ரி ஆயுதங்கள் மற்றும் 162,000 தொடர்பு சாதனங்கள் வழங்கியுள்ளன.

இவை அனைத்தும் தற்போது பயங்கரவாதிகள் வசம் உள்ளன.மற்றும் ஆளில்லா விமானங்களை தற்கொலை ட்ரோன்களாக தாலிபன்கள் உபயோகிக்கலாம் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்த ஆறு லட்ச சிறிய ஆயுதங்கள் மற்றும் விமானங்கள் சீனா வசம் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதுவே இந்தியாவின் கவலைக்கு காரணம்.

இவையனைத்தையும் இந்தியாவிற்கு எதிராக மற்ற பயங்கரவாத அமைப்புகள் உபயோகிக்க அதிக வாய்ப்புள்ளது.தாலிபன்களுக்கு சீனா ஆதரவு அளிப்பதாக தெரிகிறது.இதன் மூலம் அமெரிக்காவின் அதிநவீன ஆயுதங்கள் சீனாவின் கைகளுக்கு சென்றால் அவற்றை ரிவர்ஸ் என்ஜினியரிங் செய்து அந்த தொழில்நுட்பங்களை சீனா கைப்பற்ற வாய்ப்புள்ளது.

டேங்குகள் முதல் ஆளில்லா விமானங்கள் வரை, தாக்கும் விமானங்கள் முதல் விமானம் தாங்கி கப்பல்கள் வரை பிளாக் ஹாக் போன்ற வானூர்திகள் முதற்கொண்டு சீனா எதையும் ரிவர்ஸ் என்ஜினியரிங் செய்யும்.

வானூர்திகள் மற்றும் விமானங்களை அமெரிக்கா உபயோகப்படுத்த முடியாத அளவு சேதப்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளது.ஆனால் தாலிபன்கள் பிளாக் ஹாக் வானூர்திகளில் பறக்கும் கானொளி சமீபத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.