
இந்திய கடற்படை இஸ்ரேலிய நிறுவனமான ஏரோனாடிக்ஸிடம் இருந்து ஆர்பிட்டர்-4 ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது.
இந்த ஆர்பிட்டர்-4 ட்ரோன் பறப்பதற்கு ஒடுதளம் தேவை இல்லை இவற்றை சிறிய கப்பல்கள் அல்லது கலன்களில் இருந்தும் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகை டரோன்கள் அதிநவீனமானவை மேலும் பல்திறன் பல்நடவடிக்கை மேற்கொள்ளும் திறன்களை கொண்டவை ஆகும், இவற்றால் ஒரே நேரத்தில் இரண்டு சுமைகளை சுமக்க முடியும்.
இதுபற்றி மேலதிக தகவல்களை இந்திய கடற்படை இதுவரை வெளியிடவில்லை.