
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வரும் க்வாட் தலைவர்கள் சந்திப்புக்கு இடையே இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் சூகா ஆகியோர் சந்தித்து பேசினர்.
இருதரப்பும் உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், வர்த்தக மற்றும் கலாச்சார தொடர்புகளை அதிகப்படுத்துவது குறித்தும் சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தலைவர்களும் மும்பை அஹமதாபாத் இடையேயான அதிவேக ரயில்வே பாதை திட்டம் தொடர்பாகவும் பேசியுள்ளனர், இத்திட்டம் இருதரப்பு உறவுகளின் அடையாளம் எனவும் கூறினர்