அதிநவீன அஸ்திரா ஏவுகணை சுகோய் உடன் இணைப்பு !!
1 min read

அதிநவீன அஸ்திரா ஏவுகணை சுகோய் உடன் இணைப்பு !!

இந்திய விமானப்படையின் சுகோய் 30 ரக போர் விமானத்தில் அதிநவீன அஸ்திரா ஏவுகணையின் புதிய வடிவம் இணைக்கப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் நரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ARMY-2021 FORUM நிகழ்ச்சியில் இந்த ஏவுகணை காட்சிபடுத்தப்பட்டதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசும் போது நமது சொந்த தயாரிப்பில் உருவான பல வகை தளவாடங்களை இந்த நிகழ்ச்சியில் காட்சிபடுத்தியதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.

அந்த வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த ஹெலினா மற்றும் நாக் ஏவுகணைகள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன.