
இந்திய விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா சமீபத்தில் இந்திய ஏரோஸ்பேஸ் துறை சார்ந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் அடுத்த 20 ஆண்டுகளில் இந்திய விமானப்படை சுமார் 350 உள்நாட்டு தயாரிப்பு போர் விமானங்களை படையில் இணைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.
சீனாவை மனதில் வைத்து இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் பேசினார்.
இலகுரக தேஜாஸ் மார்க்-1, தேஜாஸ மார்க்-2 ஐந்தாம் தலைமுறை ஆம்கா உள்ளிட்ட அதிநவீன இந்திய தயாரிப்பு விமானங்கள் இவற்றில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.