இந்திய கடற்படைக்கு எத்தனை அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் தேவை !!
1 min read

இந்திய கடற்படைக்கு எத்தனை அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் தேவை !!

சமீபத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை பெறுவதற்காக ஆக்கஸ் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது.

அதன்படி பிரிட்டிஷ் அஸ்டியூட் ரக கப்பலின் டிசைனை வைத்து 8 கப்பல்களை ஆஸ்திரேலியா பெறும், இதனால் ஏற்கனவே ஆஸ்திரேலியாவுடனான நீர்மூழ்கி ஒப்பந்தத்தை நம்பி பல ஒப்பந்தங்களை நழுவ விட்ட ஃபிரான்ஸ் கடும் ஏமாற்றமடைந்தது.

தற்போது இதிலிருந்து விடுபட அந்த இழப்பை சரிகட்ட ஃபிரான்ஸ் இந்தியாவுடன் இணைந்து செயல்படலாம் அப்படி நடந்தால் ஃபிரான்ஸூக்கு சில வாய்ப்புகள் உள்ளன.
அவையாவன, அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களுக்கான அணு உலை தொழில்நுட்பம் பகிர்வது,

அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களுக்கான செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை தரலாம், மேலதிக ஸ்கார்பீன்களுக்கான விலையை குறைக்கலாம், உத்தம் ஏசா ரேடார் மற்றும் காவேரி என்ஜின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் உதவலாம் அல்லது மிஸ்ட்ரல் ரக கப்பலை போன்று மற்றொரு கப்பலை உருவாக்க உதவலாம்.

தற்போது கேள்வி இந்திய கடற்படைக்கு குறைந்தபட்சம் எத்தனை அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் தேவைப்படும் என்பது தான்

3 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் 3 அணுசக்தி பலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிகளை பாதுகாக்க வேண்டியதாகிறது.

3 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் 3 விமானந்தாங்கி கப்பல் படையணிகளை பாதுகாக்க தேவைப்படும்,

3 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் தொலைதூர ரோந்து பணி, எதிரி கடற்படை நடமாட்டம் ஆகியவற்றை கண்காணிக்க தேவைப்படும்.

ஆஸ்திரேலியாவே 8 அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகளை பெற விரும்பும் போது அருகிலேயே எதிரிகளை கொண்டுள்ள நாம் மிகப்பெரிய கடல்பரப்பை பாதுகாக்க வேண்டிய நமக்கு இன்னும் அதிகமாக தேவைப்படும் என்பதே உண்மை நிலை ஆகும்.