ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் அல்லயான்ஸ் ஏர் நிறுவனத்திற்கு இரண்டு டோர்னியர்228 ரக விமானங்களை விற்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் மலை பிரதேச மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் விமான போக்குவரத்து பலனடையும் இதன் வாயிலாக சுற்றுலா துறை வளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமானங்கள் உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் அமைந்துள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன என்பது கூடுதல் தகவல் ஆகும்.