இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் !!

  • Tamil Defense
  • September 22, 2021
  • Comments Off on இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் லடாக்கில் இறுதிகட்ட சோதனை ஒட்டம் !!

கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி இரண்டு இந்திய தரைப்படை இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் லடாக் சென்றன, தற்போது இறுதிக்கட்ட சோதனைகளுக்கு அவை தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை தற்போது லே விமானப்படை தளம், தவ்லத் பெக் ஒல்டி முன்னனி படை தளம், சியாச்சின் உள்ளிட்ட இடங்களுக்கு பறந்து வருகின்றன என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இவை இந்திய தரைப்படை மற்றும் விமானப்படை விமானிகளால் இயக்கப்பட்டு வருகின்றன, விரைவில் படையில் இணைப்பதற்கான முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

இந்திய விமானப்படை மற்றும் தரைப்படக்கும் சேர்த்த 200க்கும் அதிகமான இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் தேவைப்படும் என கூறப்படுகிறது.

இந்த இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரப்படும் அரதப்பழைய சீட்டா மற்றும் சேத்தக் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக படையில் இணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.