தொடர் தயாரிப்புக்கு தயார் நிலையில் ஹால் HAL HTT-40

  • Tamil Defense
  • September 3, 2021
  • Comments Off on தொடர் தயாரிப்புக்கு தயார் நிலையில் ஹால் HAL HTT-40

ஹால் நிறுவனம் மேம்படுத்தியுள்ள HTT-40 அடிப்படை பயிற்சி விமானத்தின் கடைசி கட்ட மேம்பாடு தொடர்பான சோதனை சோதனை விமானிகளால் நடத்தப்பட்டது.தற்போது இது ஆபரேசன் கிளியரன்சிற்கு தயாராக உள்ளதாக ஹால் கூறியுள்ளது.

குறைந்த அளவு தொடர் தயாரிப்பிற்கு தேவையான அனைத்து மேம்பாட்டு தொடர்பான சோதனைகளும் முடிவடைந்துள்ளது.எனவே அடுத்த வருடத்தில் இருந்து குறைந்த அளவு தொடர் தயாரிப்பிற்கு விமானம் உட்படுத்தப்பட உள்ளது.

ஊழல் காரணமாக ஸ்விஸ் தயாரிப்பு பிளாட்டஸ் விமானங்கள் வாங்குவதை நிறுத்திய பிறகு ஹால் நிறுவனத்தின் HTT-40 விமான மேம்பாட்டிற்கு பாதுகாப்பு அமைச்சகம் முழு ஆதரவு அளித்தது.மேலும் 106 அடிப்படை பயிற்சி விமானங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டது.

விரைவில் இந்த விமானத்தை உபயோகிப்பாளர் சோதனையாக இந்திய விமானப்படை சோதனை செய்ய உள்ளது.