
இந்தியாவின் முன்னனி கப்பல் கட்டும் தளம் தான் கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம்.இந்நிறுவனம் தற்போது பிரான்சின் Naval Group நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.அதன்படி போர்க்கப்பல்கள் இணைந்து மேம்படுத்தி நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளன.
தற்போது பாதுகாப்பு அமைச்சக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் GRSE தளம் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு போர்க்கப்பல்களை கட்டு வழங்கி வருகிறது.இந்த புதிய ஒப்பந்தம் மூலம் உலக நாடுகளின் கடற்படைக்கு ஏற்ற போர்க்கப்பல்களை தயாரித்து இரு நிறுவனங்களும் வழங்கும். GRSE இதுவரை இந்தியா மற்றும் வெளிநாட்டு படைகளுக்காக 100 போர்க்கப்பல்களுக்கும் மேல் கட்டியுள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து கப்பல் கட்டும் துறையில் தமக்கு இருக்கும் படிப்பினைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் உலகத்தரம் வாய்ந்த போர்க்கப்பல்களை தயாரித்து வழங்க உள்ளன.