
சமீபத்தில் தொலைபேசி மூலமாக ஃபிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன் ட்ரையன் மற்றும். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் பேசி கொண்டனர் அப்போது இருவரும் உறவுகளை வலுப்படுத்த முடிவு செய்தனர்.
இரண்டு அமைச்சர்களும் அடுத்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐ.நா பொதுசபை கூட்டத்தின் போது சந்தித்து பேச உள்ளனர்.
மேலும் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் நிலை குறித்து விவாதித்ததாகவும் ஃபிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தை ஆக்கஸ் நீர்மூழ்கி எப்பந்தத்திற்கு பிறகு நடைபெற்றுள்ளதும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான ஃபிரெஞ்சு தூதர்கள் திரும்ப அழைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.