இந்த வருடத்தில் நான்கு கப்பல்கள் அடுத்தடுத்து படையில் இணைப்பு !!
1 min read

இந்த வருடத்தில் நான்கு கப்பல்கள் அடுத்தடுத்து படையில் இணைப்பு !!

இந்திய இந்த வருட இறுதிக்குள்ளாக அடுத்தடுத்து நான்கு போர்க்கப்பல்களை படையில் இணைக்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பல்களில் முதலாவதான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம், ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களில் நான்காவதான ஐ.என்.எஸ் வேலா,

பின்னர் செப்டம்பர் மாத இறுதிக்குள்ளாக ஏவுகணை கண்காணிப்பு கப்பலான ஐ.என்.எஸ். த்ருவ், கடைசியாக ஏவுகணை சோதனை கப்பலான ஐ.என்.எஸ். அவினாஷ் ஆகியவை படையில் இணைய உள்ளன.

மேலும் ஐ.என்.எஸ் விக்ராந்தின் சோதனை ஒட்டத்துடன் இந்த வருடம் இந்திய கடற்படைக்கு நல்ல வருடமாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை

காரணம் ஏறத்தாழ 5 முன்னனி கப்பல்கள் வரை படை இணைப்புக்கு தயாராக உள்ளன, ஒவ்வொரு வருடமும் இதே வேகம் நீடித்தால் சீன கடற்படை விரிவாக்கத்துக்கு இணையாக சவால் விடுக்கலாம்.