1 min read
லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஐந்து நெடுஞ்சாலை ஒடுதளங்கள் அமைக்க அனுமதி !!
இந்திய விமானப்படையின் திறன்களை அதிகரிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் நெடுஞ்சாலை ஒடுதளங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஜம்மு பகுதியில் இரண்டு ஒடுதளங்கள், காஷ்மீர் பகுதியில் இரண்டு ஒடுதளங்கள் மற்றும் லடாக் பகுதியில் ஒரு ஒடுதளம் அமைக்கப்பட உள்ளது.
முதல் நான்கு ஒடுதளங்களும் பாகிஸ்தானை மையமாகவும், மீதமுள்ள கடைசி ஒடுதளம் சீனாவை மையமாக கொண்டும் அமைக்கப்பட உள்ளன.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் இத்தகைய ஒடுதளம் ஒன்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் விமானப்படை தலைமை தளபதி பதவ்ரியா முன்னிலையில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.