பஞ்சீர் பகுதியில் தொடரும் சண்டை;41 தாலிபன்கள் உயிரிழப்பு

  • Tamil Defense
  • September 2, 2021
  • Comments Off on பஞ்சீர் பகுதியில் தொடரும் சண்டை;41 தாலிபன்கள் உயிரிழப்பு

ஆப்கனின் பாஞ்சீர் பள்ளத்தாக்கு பகுதியில் தாலிபன்களுக்கு எதிராக சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தற்போது நடைபெற்ற சண்டையில் 41 தாலிபன்கள் நார்தர்ன் அலையன்ஸ் படையால் வீழ்த்தப்பட்டுள்ளனர் மேலும் 20 பேரை கைதிகளாக பிடித்துள்ளனர்.

பள்ளத்தாக்கு பகுதிக்குள் காவாக் எனும் பகுதி வழியாக தாலிபன்கள் நுழைய முற்பட்டதை அடுத்து இந்த சண்டை நடைபெற்றுள்ளது.இது தவிர ஆன்டரப் பகுதிக்குள் தாலிபன்கள் நுழைய முற்பட்டதை அடுத்து அங்கும் நடந்த சண்டையில் 34 தாலிபன்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

நாங்கள் உங்களை பள்ளத்தாக்கு பகுதிக்குள் நுழைய அனுமதிப்போம் ஆனால் திரும்பி செல்ல அனுமதிக்க மாட்டோம் என நார்தர்ன் அலையன்ஸ் படையின் கமாண்டர் கூறியுள்ளார்.

அமெரிக்கா ஆப்கனை விட்டு வெளியேறிய பிறகு முதல் முறையாக பாஞ்சீர் பகுதியை தாலிபன்கள் தாக்கினர்.ஆனால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

தாலிபன்கள் தற்போது பாஞ்சீர் பள்ளத்தாக்கு பகுதியை தனிமைப்படுத்த தொடங்கியுள்ளனர்.இணைய சேவை, மின்சார சேவை துண்டிக்கப்பட்டு தற்போது உணவு சப்ளையை தடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.