காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் !!

  • Tamil Defense
  • September 23, 2021
  • Comments Off on காஷ்மீர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய துருக்கி அதிபர் எர்டோகான் !!

துருக்கி அதிபர் எர்டோகான் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைபாட்டோடு காஷ்மீர் குறித்து பேசியுள்ளார்.

அதாவது 74 வருடங்களாக தொடர்ந்து நீடிக்கும் காஷ்மீர் பிரச்சினையில் காஷ்மீருக்கு ஆதரவளிக்கிறோம் என பேசியுள்ளார்.

இதற்கு இந்தியா துருக்கி அடுத்த நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என கண்டனம் தெரிவித்து உள்ளது.

மேலும் துருக்கி அதிபர் எர்டோகான் ரோஹிங்கியா மற்றும் உய்குர் இஸ்லாமிய மக்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசியுள்ளார்.