
நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு மேலதிக 19 இடங்களில் அவசரகால தரையிறங்கு சாலைகள் அமைக்கப்படும் எ் தேசிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் கூறியுள்ளார்.
இராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை 925A ல் அவசர தரையிறங்கு சாலையை திறந்து வைத்து பேசிய அமைச்சர் இது போன்ற முக்கியமான சாலைகள் தேசப்பாதுகாப்பிற்கும் எல்லைப் பாதுகாப்பிற்கும் அவசியம் என கூறினார்.
இராஜஸ்தானில் உள்ள பாலோடி-ஜெய்சால்மீர், பார்மர் -ஜெய்சால்மீர் ஆகிய இடங்களிலும் மேற்கு வங்கத்தின் காரக்பூர்-பாலசோர் ,அஸ்ஸாமின் ஹசிமாரா-குவகாத்தி,குஜராத்தின் புஜ்-நாலியா, அஸ்ஸாமின் லே/நியோமா பகுதி மற்றும் மேலும் பல பகுதிகளில் இந்த அவசரகால சாலைகள் அமைக்கப்பட உள்ளன.
நாட்டின் சாலைகள் இராணுவம் உபயோகிக்கும் தரத்தில் உள்ளதாகவும் எந்த வித அவசர சூழ்நிலைகளுக்கும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இராஜஸ்தானில் உள்ள NH-925 சாலையில் கடந்த வியாழன் அன்று இரு அமைச்சர்களுடன் விமானப்படையின் ஹெர்குலிஸ் விமானம் இந்த அவசர சாலையில் தரையிறங்கியது.இதை தொடர்ந்து ஜாகுவார் போன்ற மற்ற விமானங்களும் சாலையில் தரையிறங்கி காட்டின.