இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க ரூபாய் 10 கோடி வரை தர முடியும் DRDO தலைவர் !!

  • Tamil Defense
  • September 26, 2021
  • Comments Off on இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க ரூபாய் 10 கோடி வரை தர முடியும் DRDO தலைவர் !!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் DRDO தலைவர் சதீஷ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

239 மாணவர்களுக்கு பட்டமளித்துவிட்டு உரையாற்றிய அவர் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல் தான் விதை என்றார், நீங்கள் முன்வந்து உலகை இந்திய தயாரிப்புகளால் நிரப்ப வேண்டும் என்றார்.

மேலும் பேசும்போது உங்களை போன்றோர் தயாரிக்கும் கண்டுபடிப்புகள் பாதுகாப்பு துறைக்கு ஏற்றதாக கருதப்பட்டால் 10 கோடி வரை ஊக்கத்தொகையை எங்களால் தர முடியும் என்றார்.