இந்தியா தயாரிப்பு விமானத்தை வாங்கிய மொரிஷியஸ் !!

  • Tamil Defense
  • September 15, 2021
  • Comments Off on இந்தியா தயாரிப்பு விமானத்தை வாங்கிய மொரிஷியஸ் !!

நமது ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த டோர்னியர்-228 ரக விமானம் ஒன்றை மொரிஷியஸ் வாங்கி உள்ளது மேலும் ஒன்றை குத்தகைக்கு எடுத்துள்ளது.

திங்கட்கிழமை அன்று இந்தியா அந்த விமானத்தை இந்திய பெருங்கடல் பிராந்திய நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்துவதற்கான சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒப்படைத்தது.

இது பற்றி ட்விட்டரில் பதிவிட்ட மொரிஷியஸ் இந்திய தூதரகம் லைன் ஆஃப் க்ரெடிட் திட்டத்தின் அடிப்படையில் விமானம் வழங்கப்பட்டதாகவும் இது இருநாடுகள் இடையேயான கடல்சார் ஒத்துழைப்பை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தது.

ஃபிலிப்பைன்ஸ் அரசும் தனது கடலோர காவல்படைக்கு தமது த்ருவ் மற்றும் டோர்னியர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.