மிக பயங்கரமான சீன ஆயுதம் என போற்றப்பட்ட ஏவுகணை புஸ்வாணமானது !!!

  • Tamil Defense
  • September 29, 2021
  • Comments Off on மிக பயங்கரமான சீன ஆயுதம் என போற்றப்பட்ட ஏவுகணை புஸ்வாணமானது !!!

கடந்த வருடம் சீனா ஒரு புதிய தொலைதூர வானிலிருந்து வானிலக்கை தாக்கும் ஏவுகணையை தயாரித்து உள்ளதாக அறிவித்தது அதன் பெயர் பி.எல்-15 ஆகும்.

பல்வேறு தளங்களில் சீன ராணுவ பார்வையாளர்கள் வல்லுனர்கள் ஆதரவாளர்கள் இந்த ஏவுகணை சுமார் 400 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பு கொண்டது என தம்பட்டம் அடித்து கொண்டனர்.

தற்போது சீனாவின் ஸூஹாய் நகரில் நடைபெறும் விமான கண்காட்சியில் இந்த ஏவுகணை பார்வைக்கு வைக்கபட்டு உள்ளது, அங்கு இதன் தாக்குதல் வரம்பு வெறுமனே 145 கிலோமீட்டர் என குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதல் வரம்பு கூட ஏவாக்ஸ் விமானங்கள் போக்குவரத்து விமானங்கள் டேங்கர் விமானங்கள் போன்ற பெரிய இலக்குகளுக்கு தான் என்பது கூடுதல் தகவல்.

இதன் மூலமாக போர் விமானங்கள் போன்ற அளவில் சிறிய இலக்குகளுக்கான தாக்குதல் வரம்பு இன்னமும் குறைவாகவே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

எது எப்படியோ ஆகா ஒஹோ என புகழப்பட்ட ஆயுதம் இப்படி புஸ்வாணமானது உலகளாவிய ரீதியில் காமெடியாக பார்க்கப்படுகிறது.