
இந்தியாவின் உத்ரகன்ட் மாநிலத்தில் உள்ள பரகோட்டி எல்லைக்குள் நுழைந்த சுமார் 100 சீன இராணுவத்தினர் அங்கிருந்த பாலத்தை உடைத்து சென்றுள்ளனர்.இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றுள்ளது எனினும் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிழக்கு செக்டாரில் அமைதியாக படைவிலக்கம் நடைபெற்று வரும் நிலையில் சென்டர் செக்டாரில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த பரஹோடி பகுதியில் இதற்கு முன் பெரிய அளவில் ஊடுருவல்கள் நிகழ்ந்தது இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆகஸ்டு 30 அன்று நடைபெற்றுள்ளது இந்த சம்பவம்.சுமார் 55 குதிரைகளில் 100 சீன வீரர்கள் 5கிமீ தூரம் இந்திய எல்லைக்குள் வந்துள்ளனர்.இவர்களை இந்திய வீரர்கள் எதிர்ப்பதற்கு முன்பே இவர்கள் திரும்பியுள்ளனர்.
உள்ளே நுழைந்த சீன வீரர்கள் சுமார் 3 மணி நேரம் இந்திய எல்லைக்குள்ளேயே இருந்துள்ளனர்.இந்த பகுதியில் அதிக இராணுவ நடமாட்டமே இருக்காது என்ற நிலையில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் பாதுகாப்பு தொடர்பான கவலையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது.
சீன வீரர்கள் உள்ளே நுழைந்தது தெரிந்தவுடன் இந்தோ திபத் மற்றும் இராணுவப் படைகள் அங்கு அனுப்பப்பட்டன.எனினும் அதற்கு முன்பே சீனர்கள் வெளியேறியுள்ளனர்.