பாக்ரம் விமான தளத்தை சீனா கைப்பற்ற நினைக்கிறதா ? அமெரிக்க டிப்ளோமேட் நிக்கி ஹாலே எச்சரிக்கை

  • Tamil Defense
  • September 4, 2021
  • Comments Off on பாக்ரம் விமான தளத்தை சீனா கைப்பற்ற நினைக்கிறதா ? அமெரிக்க டிப்ளோமேட் நிக்கி ஹாலே எச்சரிக்கை

ஆப்கனில் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்த பாக்ரம் விமான தளத்தை சீனா கைப்பற்ற விரும்புகிறது எனவும் இதை அமெரிக்கா கவனிக்க வேண்டும் எனவும் முன்னாள் சீனியர் அமெரிக்க டிப்ளோமேட் நிக்கி ஹாலே அவர்கள் கூறியுள்ளார்.

தைவான்,இஸ்ரேல்,இந்தியா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அமெரிக்க கூட்டாளுடன் அமெரிக்க முதலில் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஆப்கனை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளதால் அது பயங்கரவாதிகள் பெருகும் நாடாக இருக்கும் எனவும் உலகம் முழுதும் தனது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை அமெரிக்கா நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சீனா பாக்ரம் தளத்தின் செயல்பாடுகளை கையில் எடுத்தால் இந்தியாவிற்கு எதிராக செயல்பட பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.எனவே அமெரிக்காவிற்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன என அவர் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா தனது கூட்டாளி நாடுகளிடையே உறவை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.