
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகரை மையமாக கொண்டு செயல்படும் சினார் கோர் படையணி தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் பாண்டே பயங்கரவாதிகளின் குடும்பங்களை சந்தித்தார்.
அப்போது உங்களது குழந்தைகளை பயங்கரவாத பிடியில் இருந்து மீட்க முயல வேண்டும் என கேட்டு கொள்கிறேன் ஆனால் அதனை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் உங்களிடமே விட்டு விடுகிறேன் என்றார்.
அப்போது
கூடவே காஷ்மீர் பகுதி காவல்துறை ஐ.ஜி விஜய்குமார் இ.கா.ப அவர்களும் இருந்தார் அவர் பாதுகாப்பு படைகள் மற்றும் காவல்துறையினர் பயங்கரவாதிகள் சரணடைய போதுமான வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர், ஆகவே உங்கள் பிள்ளைகளை அமைதி பாதைக்கு திரும்ப வலியுறுத்த வேண்டும் என்றார்.