எல்லையோரம் மேலதிக ராணுவ உறைவிடங்களை கட்டி வரும் சீனா; பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் !!
ஒரு வருடத்திற்கு மேலாக இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சினை நடைபெற்று வரும் நிலையில் சீனா எல்லையோரம் தனது இருப்பை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி சீனா கிழக்கு லடாக்கில் குறைந்தபட்சமாக 7 இடங்களில் அதிநவீன ராணுவ உறைவிடங்களை கட்டி வருகிறது மேலும் விமான தளங்களை மேம்படுத்தி வருகிறது.
காரகோரம் கணவாய் அருகே வஹாப் ஸில்கா தொடங்கி, பியூ, ஹாட் ஸ்ப்ரீங்ஸ், சாங்லா, டஷிகாங், மன்ஸா மற்றும் சூரூப் ஆகிய பகுதிகளில் இவை கட்டப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு உறைவிடத்திலும் சுமார் 80 முதல் 84 கண்டெய்னர்கள் 7 பிரிவுகளாக அமைக்கப்பட்டு உள்ளன, இதன் மூலம் சீனா உடனடியாக எல்லை பிரச்சினையை முடிக்க விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.
ஆகவே வருங்காலத்தில் சீன படைகளின் நடமாட்டம் பன்மடங்கு அதிகயிக்கலாம் அதே நேரத்தில் இந்திய வீரர்களும் சீன படையினருக்கு பலத்த நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து கடினமான சூழல்களில் இயங்கி பழக்கப்பட்ட இந்திய வீரர்கள் சீன வீரர்களுக்கு தங்களது தொலைதூர ரோந்து நடவடிக்கைகள் மூலமாக நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர்.
இரண்டு நாடுகளும் சுமார் தலா 50,000 வீரர்கள் பிரங்கிகள் போர் விமானங்கள் டாங்கிகள் கவச வாகனங்கள் என எல்லையோரம் நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.