ஜார்கண்ட்டில் நக்சல் தாக்குதல் மூத்த பாதுகாப்பு படை அதிகாரி வீரமரணம் !!

எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த துணை கமாண்டன்ட் ராஜெஷ் குமார் ஆவார் இவரை சிறிது காலம் ஜார்கண்ட் மாநில நக்சல் ஒழிப்பு படையில் பணியாற்ற உத்தரவு பிறபிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜார்கண்ட் மாநில நக்சல் ஒழிப்பு படையான ஜாகுவாரில் பணியாற்றி வந்த அவர் நக்சல்களுடன் ஏற்பட்ட மோதல் ஒன்றில் படுகாயமடைந்தார்.

உடனடியாக அவரை ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலமாக அனுப்பி வைத்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேன் தனது இரங்கலை தெரிவித்து உள்ளார். சம்பவ இடத்தில் நக்சல்கள் விட்டுச்சென்ற ஆயுதங்கள் கைபற்றப்பட்டு உள்ளன.