எல்லையோர சாலைகள் நிறுவனத்தில் புதியதாக 4 பெண்கள் சாலை கட்டுமான கம்பனிகள் உருவாக்க திட்டம் !!

  • Tamil Defense
  • September 24, 2021
  • Comments Off on எல்லையோர சாலைகள் நிறுவனத்தில் புதியதாக 4 பெண்கள் சாலை கட்டுமான கம்பனிகள் உருவாக்க திட்டம் !!

எல்லையோர சாலைகள் நிறுவனம் இந்தியாவின் எல்லைகளில் புதிய சாலைகள் பாலங்கள் சுரங்கங்கள் அமைப்பது பின்னர் அவற்றை பராமரிப்பது போன்ற படிகளை மேற்கொள்ளும் அமைப்பாகும்.

தற்போது இந்த அமைப்பில் நான்கு பெண்கள் சாலை கட்டுமான கம்பனிகளை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது, இவை பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் இயங்கும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் பிபால்கோட்டி பகுதியை தளமாக கொண்டு இயங்கி வரும் 75ஆவது சாலை கட்டுமான கம்பனியின் கட்டளை அதிகாரியாக மேஜர் அய்னா ராணா எனும் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டார்.

இவருடைய கம்பனி இந்தோ சீன எல்லையோர சாலைக்கு பொறுப்பானதாகும் மேலும் அந்த கம்பனியில் உள்ள முன்று பிளட்டூன் கமாண்டர்களும் பெண் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.