
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாரத் கனரக மின்னனு நிறுவனம் போர்க்கப்பல்களுக்கான மேம்படுத்தபட்ட அதிவேக தாக்குதல் பிரங்கிகளை தயாரிக்க உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கோவா கப்பல் கட்டுமான தளம் மற்றும் பாரத் கனரக மின்னனு நிறுவனத்திற்கு இடையே கையெழுத்தாகி உள்ளது.
இந்த மேம்படுத்தபட்ட அதிவேக தாக்குதல் பிரங்கிகளை பெல் நிறுவனத்தின் ஹரித்வார் தொழிற்சாலை பிரிவு தயாரிக்கும் எனவும்,
இந்த பிரங்கிகளின் சோதனை, கப்பலில் பொருத்தும் பணி, மீண்டும் சோதனை பயன்பாட்டுக்கு ஒப்படைத்தல் என அனைத்து பணிகளையும் பெல் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.
இந்த வகை அதிவேக தாக்குதல் பிரங்கிகள் அதிநவீன குண்டுகளை அதிக தொலைவிற்கு பல்வேறு வகையான இலக்குகளை நோக்கி சுட வல்லவை என்பது குறிப்பிடத்தக்கது.