விண்வெளி துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா விருப்பம் !!
முக்கிய ஆஸ்திரேலிய அதிகாரிகள் மற்றும் ஆஸ்திரேலிய விண்வெளி முகமையின் மூத்த விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா விரும்புவதாக தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியா 2030ஆம் ஆண்டுவாக்கில் தனது விண்வெளி பொருளாதாரத்தை மூன்று மடங்காக அதிகரிக்க விரும்புகிறது, மேலும் இந்தியா விண் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க உள்ளது.
இரு நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி முகமைகளின் மூத்த விஞ்ஞானிகள் இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பு சந்திப்பில் கலந்து கொண்டு ஆஸ்திரேலியா இந்தியா விண்வெளி இகோஸ்பேஸை அமைப்பது தொடர்பாக பேசினர்.
இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஒ ஃபேர்ரல் கூறுகையில் இருதரப்பும் விண்வெளி ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் புதிய அத்தியாயம் படைக்க வேண்டும் எனவும் கூறினார்.
புவியியல் ரீதியாக ஆஸ்திரேலியா தெற்கு பகுதியில் அமைந்துள்ளதால் விண்வெளி ஆராய்ச்சிக்கு மிகவும் உகந்த இடமாக திகழ்வதாகவும் அதே போல குறைந்த வெளிச்ச மாசு, ரோபோட்டிக்ஸ், செயற்கைகோள் தொழில்நுட்பம் ஆகியவை சாதகமாக உள்ளதாகவும் கூறினார்.
இருதரப்பை சேர்ந்த தொழில் முனைவோர்களும் விண்வெளி துறையில் நல்ல எதிர்காலம் உள்ளதாகவும் இதனை உணர்ந்து இரு நாட்டு அரசுகளும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் எனவும் தங்களது கருத்தை முன்வைத்தனர்.