
சமீபத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து நீர்மூழ்கி கப்பல் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்தது.
இதனையடுத்து ஏற்கனவே ஒப்பந்தத்தை பெறும் நிலையில் இருந்த ஃபிரான்ஸ் ஏமாற்றத்துடன் மனக்கசப்பில் உள்ளது.
தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான உறவுகளிலும் இந்த ஒப்பந்தம் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை தங்களது கடற்பகுதிக்குள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என நியூஸிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நியூஸிலாந்து பிரதமரை தொடர்பு கொண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் திட்டம் குறித்து விளக்கிய பின்னர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.