ஆஸ்திரேலிய ஆக்கஸ் அணுசக்தி நீர்மூழ்கி ஒப்பந்தம்; ஃபிரான்சுக்கு கல்தா கொடுத்த நட்பு நாடுகள் !!

  • Tamil Defense
  • September 18, 2021
  • Comments Off on ஆஸ்திரேலிய ஆக்கஸ் அணுசக்தி நீர்மூழ்கி ஒப்பந்தம்; ஃபிரான்சுக்கு கல்தா கொடுத்த நட்பு நாடுகள் !!

ஆஸ்திரேலியா மிக நீண்ட காலமாக தனது கடற்படையை வலுப்படுத்த பல்வேறு வகையான நடவடிக்கைகளை நீண்ட கால நோக்கில் எடுத்து வருகிறது.

அந்த வகையில் தனது கடற்படைக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை வாங்க முடிவு செய்த நிலையில் ஃபிரான்ஸ் நாட்டின் நேவல் க்ருப் உடன் ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் ஃபிரான்சுக்கு ஒப்பந்தத்தை வழங்காமல் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை கூட்டாக இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த உள்ளன.

சுமார் 90 பில்லியன் டாலர்கள் மதிப்பில் 12 அதிநவீன டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களுக்கான ஆர்டரை பெறும் கனவு தற்போது சுக்கு நூறாகி உள்ளது.

இதனை ஃபிரான்ஸ் அரசு வட்டாரங்கள் முதுகில் குத்தப்பட்டதாக கருதுகிறது கடைசி நேரத்தில் தான் தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதாக ஃபிரான்ஸ் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு ரஃபேல் விமானங்களை ஏற்றுமதி செய்யும் ஆர்டரை பெற இருந்த நிலையில் அமெரிக்க எஃப்35 விமானங்களை நோக்கி சுவிட்சர்லாந்து நகர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா இங்கிலாந்துக்கு பிறகு ஆஸ்திரேலியாவுடன் தான் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்பத்தை பரிமாற முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.