சி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா ??

  • Tamil Defense
  • September 22, 2021
  • Comments Off on சி.ஐ.ஏ தலைவருடன் இந்தியா வந்த மூத்த சி.ஐ.ஏ அதிகாரி மீது மர்ம தாக்குதலா ??

சமீபத்தில் இந்தியா வந்த சி.ஐ.ஏ தலைவர் வில்லியம் ஜெ பர்ன்ஸ் உடன் வந்த மற்றொரு சி.ஐ.ஏ அதிகாரிக்கு ஹவானா சின்ட்ரோம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வகை சம்வங்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றும் அமெரிக்க உளவாளிகள் வெளியுறவு பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினரால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக முன்வைக்கப்படுகிறது.

சமீபத்தில் கூட வியட்நாமில் ஒரு அமெரிக்க அதிகாரி இந்த பாதிப்பு பற்றி கூற அங்கு சுற்றுபயணமாக சென்ற அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸின் பயணம் மூன்று மணி நேரம் தடைபட்டது.

இது ஒரு மின்காந்த கருவியில் இருந்து செலுத்தப்படும் கதிர்களால் ஏற்படும் விளைவு எனவும் தலைவலி காதில் பலத்த சப்தம் வாந்தி மயக்கம் சுயநினைவு இழப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

இத்தகைய சம்வங்களை பற்றி விசாரிக்க சி.ஐ.ஏ ஒரு சிறப்பு பிரிவை அமைத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன குறிப்பாக அமெரிக்காவின் எதரி நாடுகளின் செயலாக இருக்குமா எனவும் விசாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வு வில்லியம் ஜெ பர்ன்ஸ் மீது குறிவைத்து நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அது பலத்த விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.