DRDO மற்றும் OFB உடன் இணைந்து புதிய பிரங்கிகளுக்காக பணியாற்றும் தரைப்படை !!

தனுஷ் மற்றும் ஏடாக்ஸ் பிரங்கிகளை விரைவில் படையில் இணைக்க வேண்டி DRDO மற்றும் OFB ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஆர்ட்டில்லரி இயக்குனர் லெஃப்டினன்ட் ஜெனரல் சாவ்லா தெரிவித்தார்.

தரைப்படையின் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனுஷ் மற்றும் ஏடாக்ஸ் பிரங்கிகளை வாங்க பிரங்கி படை விரும்புகிறது.

இரண்டிலும் உள்ள குளறுபடிகளை களைந்து விரைவில் படையில் இணைக்கும் வண்ணம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் ஆகியவற்றுடன் கைகோர்த்து பிரங்கி படல பணியாற்றி வருகிறது.

தரைப்படை சுமார் 3000 புதிய அதிநவீன பிரங்கிகளை படையில் இணைக்க விரும்புகிறது, முதற்கட்டமாக சுமார் 145 எம்777 பிரங்கிகள் மற்றும் 100 கே9 வஜ்ரா ஆகிய பிரங்கிகளை படையில் இணைத்துள்ளது.

இந்த 3000 பிரங்கிகளில் பெரும்பாலானவை 155 மில்லிமீட்டர் அளவிலானவையாக இருக்கும் மேலும் 800 மவுன்டட் பிரங்கிகளை வாங்கவும் தரைப்படை விரும்புவது குறிப்பிடத்தக்கது.